சுடச்சுட

  

  அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 6 முதல் 10 வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம் சான்றிதழ்களை வழங்கி மாவட்ட ஆட்சியர் ப. செந்தில்குமார் பேசியது:

    அரியலூர் வட்டத்தில் உள்ள 64 பள்ளிகளில் பயிலும் 2,860 மாணவ, மாணவிகளுக்கும், செந்துறை வட்டத்தில் உள்ள 113 பள்ளிகளில் 2,670 மாணவ, மாணவிகளுக்கும், ஜயங்கொண்டம் வட்டத்தில் உள்ள 124 பள்ளிகளில் 7,433 மாணவ, மாணவிகளுக்கும் என 301 பள்ளிகளில் பயிலும் 12,963 மாணவ, மாணவிகளுக்கு ஜாதி சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

     இந்தக் கல்வியாண்டில் அரியலூர் மாவட்டத்தை தேர்ச்சி விகிதத்தில் முதன்மை மாவட்டமாகக் கொண்டுவர தலைமையாசிரியர்கள் முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர். 

    நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முனுசாமி மற்றும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai