சுடச்சுட

  

  அரியலூரில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

  By அரியலூர்  |   Published on : 26th January 2013 05:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய வாக்காளர் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

  விழாவில் மாவட்ட ஆட்சியர் ப. செந்தில்குமார் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, புதிய வாக்காளர்களுக்கு புகைப்பட அடையாள அட்டையும், சிறப்பான முறையில் பணியாற்றிய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு விருதுகளும், தேசிய வாக்காளர் தினம் குறித்து கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சுப்போட்டி மற்றும் ஓவியப் போட்டியில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு விருது, சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் செந்தில்குமார் வழங்கினார்.

  பின்னர், நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகளின் வில்லுப்பாட்டு நிகழச்சி நடைபெற்றது. முன்னதாக, அரியலூர் அண்ணா சிலையிலிருந்து நிர்மலா பெண்கள் மேல்நிலைப் பள்ளி வரை நடைபெற்ற வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.

  விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் அ. கருப்பசாமி, வருவாய் கோட்டாட்சியர் கணபதி, திருமானூர் ஒன்றியக்குழுத் தலைவர் சீனிவாசன், அரியலூர் நகராட்சி ஆணையர் சரஸ்வதி, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வைத்திலிங்கம்,  வட்டாட்சியர்கள் ராமன் (தேர்தல் பிரிவு), பாலாஜி, தண்டபாணி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai