சுடச்சுட

  

  பொருளாதார கடனுதவி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்

  By அரியலூர்,  |   Published on : 26th January 2013 05:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரியலூர் மாவட்டத்தில் தாட்கோ மூலம் பொருளாதார கடனுதவி பெற ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ப. செந்தில்குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

  அரியலூர் மாவட்ட தாட்கோ மூலம் 2013-14 ஆம் நிதியாண்டில், அனைத்து பொருளாதார கடனுதவி திட்டத்தில் ஆதிதிராவிடர் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற ஜன. 31-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  நிலம் வாங்குதல் மற்றும் மேம்பாட்டுத் திட்டம், தொழில் முனைவோர் திட்டம் (18 முதல் 55 வயதிற்குள்பட்டோர்), இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்புத் திட்டம் (18 முதல் 35 வயதுக்குள்பட்டோர்), மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான சுழல் நிதி, பொருளாதாரக் கடனுதவித் திட்டம் மற்றும் மேலாண்மை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் விருப்புரிமைத் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பயன்பெறலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம், குடும்ப அட்டை எண், சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் ஆகியவற்றின் எண் மற்றும் தாட்கோ இணையத்தில் கேட்கப்பட்டுள்ள திட்டத்திற்கான ஆவணங்களுடன்,

  ட்ற்ற்ல்:ஹல்ல்ப்ண்ஸ்ரீஹற்ண்ர்ய்.ற்ஹட்க்ஸ்ரீர்.ஸ்ரீர்ம் என்ற இணையத்தில் சரியான விவரத்தை பதிவு செய்ய வேண்டும். நேரடி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. இதற்கான நேர்காணல் ஜூன் முதல் ஆகஸ்ட் மாதங்களில் அந்தந்த மாவட்ட மேலாளர் அலுவலகங்களில் நடைபெறும். எனவே, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தோர் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai