Enable Javscript for better performance
இலையூரில் குடியரசு தின சிறப்பு கிராம சபைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    இலையூரில் குடியரசு தின சிறப்பு கிராம சபைக் கூட்டம்

    By ஜயங்கொண்டம்,  |   Published on : 27th January 2013 02:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றியம் இலையூர் கிராமத்தில் கிராமசபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

       அரியலூர் மாவட்ட ஆட்சியர் ப. செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட திட்ட இயக்குநர் முனியசாமி முன்னிலை வகித்தார்.

      கூட்டத்தில் ரூ. 10 லட்சத்தில் இலையூர் செல்லியம்மன் கோவிலில் இருந்து கோரியம்பட்டிக்கு செல்லும் சாலையை அமைத்தல், ரூ. 12 லட்சத்தில் அம்புரிபள்ளம் ஏரியை ஆழப்படுத்தி சுத்தம் செய்தல், இலையூர் - உடையார்பாளையம் சாலையைச் சீரமைத்தல், வேலை உறுதித் திட்டப் பணிகளைத் தேர்வு செய்தல் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அங்கீகாரம் பெறப்பட்டன.

       மேலும் இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டத்தின் கீழ் 6 பயனாளிகளும், சூரிய ஒளி மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடு வழங்க ஒரு பயனாளியும் தேர்வு செய்யப்பட்டனர்.  முதியோர் உதவித்தொகை பயனாளிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டது.    கோட்டாட்சியர் கஸ்தூரி, மாவட்ட வழங்கல் அலுவலர் திவாகர், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் ஜீனத்பானு,  புதுவாழ்வுத் திட்ட உதவி மேலாளர் மரியதேலம்மாள், மகளிர் திட்ட அலுவலர் வசந்தி, வட்டாட்சியர்கள் சீனிவாசன், ரவி, ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் சந்திரசேகரன், கேசவன், துணை ஆணையர் முருகானந்தம், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பானுமதி ராஜேந்திரன், செந்தில்ராஜன், விஏஓ ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

        ஊராட்சித் தலைவர் கோவிந்தராஜன் வரவேற்றார். ஊராட்சி செயலர் ஸ்டாலின் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai