சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் அரசு அலுவலகங்கள்,  பள்ளிகளில் குடியரசு தின விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

    ஜயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் சார்பில் நடைபெற்ற விழாவுக்கு ஆணையர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.  நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்றத் தலைவர் மீனாள் சந்திரசேகரும், ஜயங்கொண்டம் காந்திபூங்காவில் நகர்மன்றத் துணைத்தலைவர் பி.ஆர். செல்வராஜுவும் கொடியேற்றினர். நிகழ்ச்சியில் நகர்மன்ற உறுப்பினர்கள் தண்டபாணி, மூர்த்தி, க. அறிவழகன், சி. சுப்பிரமணியன், கணேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    ஜயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சபாநாயகம், கோபு, மேலாளர் ஸ்ரீதேவி, துணைத் தலைவர் வி. தண்டபாணி ஆகியோர் முன்னிலையில், ஒன்றியக் குழுத் தலைவர் கண்ணகி குப்புசாமி கொடியேற்றினார்.

    ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆணையர்கள் சந்திரசேகரன், கேசவன் ஆகியோர் முன்னிலையில் தலைவர் சுகுனா தவச்செல்வன், வட்டாட்சியர் அலுவலகத்தில் துணை வட்டாட்சியர் அமுதா, ஜயங்கொண்டம் காவல் நிலையத்தில் ஆய்வாளர் கோடீஸ்வரன் ஆகியோர் தேசியக் கொடியேற்றினர். உதவி ஆய்வாளர்கள் ரபீக்ஹுசேன், ராமசாமி, தமிழ்ச்செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

   ஜயங்கொண்டம் பேருந்து நிலைய ஓட்டோ ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் சங்கம் சார்பில் செயலர் சுந்தரபாண்டியன் தலைமையில் தலைவர் புனிதவேல் கொடியேற்றினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai