சுடச்சுட

  

  அரியலூரில் தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா

  By  அரியலூர்  |   Published on : 28th January 2013 09:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில், தேசிய நுகர்வோர் பாதுகாப்பு தின விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
   விழாவில், மாவட்ட அளவில் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிய மாவட்ட ஆட்சியர் ப.செந்தில்குமார் பேசியது:
   நுகர்வோரின் உரிமைகள், கடமைகள், உரிமையை பாதுகாக்க நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், குறைதீர்க்கும் மன்றங்கள், அணுகுமுறை குறித்தும், பொருள்கள் வாங்கும் போது எவ்வாறு எச்சரிக்கையாக இருப்பது, சுற்றுசூழல் கேடு விளைவிக்க கூடிய பொருள்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்து நுகர்வோர் பாதுகாப்பு நிகழ்ச்சிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
   மேலும் இளம் நுகர்வோரை சிறந்த, தெளிந்த நுகர்வோராக மாற்ற மத்திய அரசின் வழிகாட்டுதலின் பேரில் தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பள்ளி, கல்லூரிகளில் நுகர்வோர் மன்றங்கள் அமைத்தல், சுய உதவிக் குழுக்களுக்கு நுகர்வோர் கல்வி பயிற்றுவிக்கும் முயிற்சியில் ஈடுபடுதல், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சி முகாம் மூலம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தமிழ்நாடு நுகர்வோர் கவசம் மாத இதழ் வெளியிடுதல், வானொலி மற்றும் ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
   எனவே பொதுமக்கள் போலிப்பொருள்களை தவிர்த்து, முத்திரை பதித்த பொருள்களை வாங்கி பயனடைய வேண்டும் என்றார் அவர்.
   இவ்விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.கருப்பசாமி, பொது விநியோகத் திட்ட துணைப் பதிவாளர் பாலமுருகன், வருவாய் கோட்டாட்சியர் கணபதி, மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தலைவர் பாஸ்கரன், மருந்துகள் ஆய்வாளர் கார்த்திகேயன், தொழிலாளர் நல ஆய்வாளர் சேதுமாதவன், நுகர்வோர் குழு மண்டல ஒருங்கிணைப்பாளர் செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர் பழனிசாமி, மாவட்ட நியமன அலுவலர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திவாகர் வரவேற்றார். வட்ட வழங்கல் அலுவலர் வேல்முருகன் நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai