சுடச்சுட

  

  எண்ணை பனை உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தல்

  By  அரியலூர்  |   Published on : 28th January 2013 09:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வறட்சி மற்றும் மின் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட எண்ணை பனை உற்பத்தியாளர்களுக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.
   அரியலூரில், தமிழ்நாடு எண்ணெய் பனை சாகுபடியாளர்கள் கலந்தாய்வுக் கூட்டம், மாவட்டத் தலைவர் தியாகராஜன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
   கூட்டத்தில், வறட்சி மற்றும் மின் பற்றாகுறையால் எண்ணை பனை உற்பத்தி மிகவும் பாதிக்கப்பட்டிருப்பதால், தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும். எண்ணை பனை பராமரிப்பு செய்து உற்பத்தியை பெருக்க நாள் ஒன்றுக்கு சுமார் 100 முதல் 180 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதால் கிணறு, ஆழ்குழாய் கிணறு ஏற்படுத்தவும், மின் மோட்டார் மற்றும் சொட்டு நீர் பாசனம் அமைக்க அரசு மானியம் வழங்க வேண்டும். எண்ணை பனை சாகுபடிக்கு உர மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். எண்ணை பனை உற்பதத்தியால், அந்நிய செலவாணி மிச்சப்படுத்தப்படுவதால் மற்றப் பயிர்களைப்போல், தோட்டக்கலை பயிர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
   தொடர்ந்து நடைபெற்ற நிர்வாகிகள் தேர்வில், மாநில தலைவராக தங்கமுத்து, துணை தலைவராக ஞானசேகரன், மாநில பொது செயலராக அண்ணாமலை, மாநில பொதுத் துணை செயலராக ராமச்சந்திரன், மாநில பொருளாளராக காளிதாஸ், மாநில அமைப்பு செயலராக தாமரைக்கண்ணன், மாநில கொள்கை பரப்பு செயலராக துரைராஜ், மாநில செயலர்களாக தஞ்சாவூர் காத்தலிங்கம், அரியலூர் தியாகராஜன், விழுப்புரம் நடராஜன், கடலூர் நாராயணசாமி, திருச்சி சேகர், கரூர் ராமசாமி, திருவாரூர் செல்வேந்திரன், நாகப்பட்டினம் இளம்பரிதி, பெரம்பலூர் ஜெயராமன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai