Enable Javscript for better performance
நாய்களுக்கு இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை- Dinamani

சுடச்சுட

    

    நாய்களுக்கு இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை

    By ஜயங்கொண்டம்  |   Published on : 28th January 2013 09:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் நகராட்சியில் நாய்கள் இனப்பெருக்கத்தை கட்டு படுத்த நாய்களுக்கு இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை மைய துவக்க விழா சனிகிழமை நடைபெற்றது.
     ஜயங்கொண்டம் நகராட்சியில் மிருக இனப்பெருக்க கட்டுபாடு 2012-2013 திட்டத்தின் கீழ் ரூபாய் ஏழு லட்சம் மதிப்பில் 400 நாய்களுக்கு இனப்பெருக்க தடை அறுவை சிகிச்சை மற்றும் வெறிநாய்க்கடி தடுப்பு ஊசி போட திட்டமிடப்பட்டுள்ளது. தஞ்சை யசோதா நிறுன மருத்துவர் சுதாகரன் தலையையிலான குழுவினர் தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து சிகிச்சையளித்து வருகின்றனர்.
     இவ்விழாவிற்கு ஜயங்கொண்டம் நகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். நகர் மன்ற துணைத்தலைவர் பி.ஆர்.செல்வராஜ் முன்னிலை வகித்தார், நகர் மன்ற தலைவர் மீனாள் சந்திரசேகர் மையத்தை திறந்து வைத்தார்.
     இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற உறுப்பினர்கள் க.அறிவழகன், தண்டபாணி, மூர்த்தி, கனேஷ், சுப்பிரமணியன், இந்திரா மற்றும் அலுவலக ஊழியர்கள் பாலமுருகன், பாண்டியன், அன்புராஜ், விமல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சுகாதார ஆய்வாளர் மணி நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai