சுடச்சுட

  

  பணி மூப்பு அடிப்படையில் தேர்வுப் பணி வழங்க வலியுறுத்தல்

  By அரியலூர்  |   Published on : 28th January 2013 09:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசு விதிகளின்படி பணிமூப்பு அடிப்படையில் தேர்வுப் பணி வழங்க வேண்டுமென தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
   இதுகுறித்து, ஆசிரியர் கழக அரியலூர் மாவட்டத் தலைவர் எஸ்.பி.தமிழ்ச்செல்வன் தலைமையில், அரியலூர் முதன்மைக் கல்வி அலுவலரிடம் அண்மையில் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
   பொதுத்தேர்விற்கு, அரசு விதிகளின்படி வினாத்தாள் கட்டுக்காப்பாளர், துறை அலுவலர், கூடுதல் துறை அலுவலர், பறக்கும் படையினர் ஆகிய பணிகளுக்கு பணி மூப்பு அடிப்படையில் தேர்வுப்பணி வழங்க வேண்டும். செய்முறை தேர்வு மற்றும் பொதுத்தேர்விற்கு, அந்தந்த கல்வி மாவட்டத்திற்குள் ஆசிரியர்களை தேர்வுப் பணியில் ஈடுபடுத்த வேண்டும். செய்முறைத் தேர்விற்கு பின்பற்றப்படும் அனைத்து விதிகளையும், மொழிப்பாடம் அகமதிப்பீட்டுத் தேர்விற்கு (கால அட்டவணை மற்றும் தேர்வாளர்களை நியமித்தல், உழைப்பூதியம்) வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அமைப்பின் மாவட்ட செயற்குழு முடிவின் படி, அரியலூர் மாவட்டத்தின் மையப்பகுதியான ஜயங்கொண்டத்தில் விடைத்தாள் மதிப்பீட்டு மையம் அமைக்க வேண்டுமென அதில் தெரிவிக்கப்பட்டது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai