Enable Javscript for better performance
பொன்பரப்பி சொர்னபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்- Dinamani

சுடச்சுட

    

    பொன்பரப்பி சொர்னபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்

    By  ஜயங்கொண்டம்  |   Published on : 28th January 2013 09:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே உள்ள பொன்பரப்பி கிராமத்தில் உள்ள பெரியநாயகி உடனுறை சொர்ணபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.
     கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஜன.24 வியாழகிழமை துவங்கி கணபதி ஹோமம், வெல்ளிகிழமை யாகசாலை பூஜைகளும் சனிகிழமை நான்காம் கால பூஜை நடைபெற்று ஞாயிற்றுகிழமை காலை 6 மணிக்கு விநாயகருக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து 8 மணியளவில் 21 குடங்களுடன் ஆலயத்தை உலா வந்து 8.30 மணிக்கு சொர்ணபுரீஸ்வரர், சுப்பிரமணியர், அம்மன், சன்டிகேஸ்வரர் ஆகிய கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
     பின்னர் 9 மணிக்கு சொர்ணபுரீஸ்வரர் மற்றும் பரிவார திருமேனிகளுக்கு அபிஷேகம் மகா தீபாராதனை நடைபெற்றது.
     மாலையில் சமய சொர்பொழிவுகள் நடைபெற்றன. இரவு சொர்ணபுரீஸ்வரர் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
     விழாவில் அரியலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் ப.செந்தில்குமார், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சங்கரசுப்பையன், முன்னால் செந்துரை ஒன்றியகுழு தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் ராம்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
     விழாவை காண பொன்பரப்பி, சிறுகளத்தூர், திருத்துளார், மாத்தூர், செந்துரை, மருவத்தூர், மருதூர், இலையூர் வாரியங்காவல், செங்குந்தபுரம், ஜயங்கொண்டம், குவாகம், கல்லாத்தூர், கொடுக்கூர், ஆண்டிமடம், உட்கோட்டை, சின்னவளையம் உள்ளிட்ட பல கிரமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
     விழாவிற்க்கான ஏற்ப்பாடுகளை கும்பாபிஷேக விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai