சுடச்சுட

  

  அரியலூர் மாவட்டத்தில், தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் ப.செந்தில்குமார்.
   இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
   அரியலூர் மாவட்ட தாட்கோ மூலம் ஆதிதிராவிடர் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்க இரண்டாம் கட்டமாக ஜன. 23ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெட்ரோல், டீசல், கேஸ் சில்லறை விற்பனை நிலையம், துரித மின் இணைப்பு திட்டம் மற்றும் இந்திய குடிமைப்பணி முதன்மைத் தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது.
   விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களது ஸ்கேன் செய்யப்பட்ட புகைப்படம், குடும்ப அட்டை எண், சாதி சான்றிதழ், வருமானச் சான்றிதழ் ஆகியவற்றின் எண் மற்றும் தாட்கோ இணையத்தில் கேட்கப்பட்டுள்ள திட்டத்திற்கான ஆவணங்களுடன் http://application.tahdco.com என்ற இணையத்தில் சரியான விவரத்தை பதிவு செய்ய வேண்டும். நேரடி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai