சுடச்சுட

  

  அரியலூர் பகுதியில் புதுப்படங்களின் திருட்டு சி.டிகள் விற்பனை செய்ததாக 5 பேரை அரியலூர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, 111 சி.டிகளை பறிமுதல் செய்தனர்.
  அரியலூர் காவல் நிலைய ஆய்வாளர் சிவலிங்கசேகர், உதவி ஆய்வாளர் சுமதி ஆகியோர், அரியலூர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மேற்கொண்ட சோதனையில் நடராஜா தியேட்டர் பகுதியில் உள்ள கடையில் 29 சிடிக்களை பறிமுதல் செய்து, கைலாசநாதர் கோவில் தெருவை சேர்ந்த குமாரையும் (33), செந்துறை சாலையில் மேற்கொண்ட சோதனையில் 36 சிடிக்களை பறிமுதல் செய்து, தெற்கு தெருவை சேர்ந்த மணிவேலையும் (23), அரியலூர் பேருந்து நிலையத்தில் மேற்கொண்ட சோதனையில் 46 சிடிக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai