Enable Javscript for better performance
19 வணிக நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் 19 வணிக நிறுவனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார் தொழிலாளர் உதவி ஆய்வாளர் சேதுமாதவன்.
     இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
     குடியரசு தினத்தன்று, அரியலூர் மாவட்டத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதா என அரியலூர் மற்றும் ஜயங்கொண்டம் பகுதிகளில் உள்ள கடைகள், உணவு நிறுவனங்கள், தங்கும் விடுதிகள், மருந்து கடைகள், ஜவுளி, பெட்ரோல் நிறுவனங்கள், திரையரங்குகள் உள்பட 34 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 19 நிறுவனங்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தி இருப்பது கண்டறியப்பட்டு, அந்த நிறுவனங்கள் மீது வழக்குப் பதிந்து சட்ட ரீதியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
     தொழிலாளர்களுக்கு வார விடுமுறை கட்டாயம் அளிக்க வேண்டும். வார விடுமுறை தினத்தன்று கடைகள், நிறுவனங்கள் முழுவதும் மூடப்பட்டிருக்க வேண்டும் அதேபோல, தொழிலாளர்களுக்கு 5 பண்டிகை விடுமுறைகளும், குடியரசு தினம், மே தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நாள்களில் தவறாமல் விடுமுறை அளிக்க வேண்டும். மேற்கண்ட 9 நாள்களில் தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தும் நிலை ஏற்பட்டால், அரியலூர் தொழிலாளர் உதவி ஆய்வாளருக்கு அந்தந்த விடுமுறை நாள்களுக்கு 24 மணி நேரத்திற்கு முன் தவகல் தெரிவிக்க வேண்டும். எனவே, இந்த விதிமுறைகளை முறையாக கடைபிடித்து, சட்ட ரீதியான நடவடிக்கைகளை தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai