சுடச்சுட

  

  அரியலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் திங்கள்கிழமை மேற்கொண்ட சோதனையில் அனுமதியின்றி மது விற்றதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

     அரியலூர் போலீஸார் மேற்கொண்ட சோதனையில் பாலையூரைச் சேர்ந்த தமிழரசன் (61), காணிக்கைபுரத்தைச் சேர்ந்த இளங்கோவன் (43), ஜயங்கொண்டம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸார் மேற்கொண்ட சோதனையில் காசான்கோட்டையை சேர்ந்த ரவி (46), உதயநத்தத்தை சேர்ந்த சிவகுமார் (35) ஆகியோர் அனுமதியின்றி மது விற்றது தெரியவந்தது.

     இதையடுத்து மேற்கண்ட 4 பேரும் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 3,240 மில்லி மது பறிமுதல் செய்யப்பட்டது.

     98 வாகன வழக்குகள்: அதேபோல, அரியலூர் மாவட்டத்தில்  ரோந்து வாகன போலீஸார் மூலம் நடைபெற்ற வாகனச் சோதனையில் சாலை விதிகளை மீறியதாக 98 மோட்டார் வாகன உரிமையாளர்கள் மீது திங்கள்கிழமை வழக்குப் பதியப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai