Enable Javscript for better performance
ஜயங்கொண்டம் அருகே கோவிலுக்குள் புதிய சிலை- Dinamani

சுடச்சுட

    

    ஜயங்கொண்டம் அருகே கோவிலுக்குள் புதிய சிலை

    By ஜயங்கொண்டம்  |   Published on : 30th January 2013 05:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் அருகே பூட்டிய கோவிலுக்குள் இருந்த புதிய சிலை குறித்து மீன்சுருட்டி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

       ஜயங்கொண்டம் அருகே உள்ள மீன்சுருட்டியை சேர்ந்த சாமிதுரை மகன் ராமமூர்த்தி (54), செல்லியம்மன் கோவில் பூசாரி. இவர் செவ்வாய்க்கிழமை காலை அபிஷேகம் முடித்து கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றார்.

      மீண்டும் பகலில் கோவிலைத் திறந்தபோது கோவிலிலுள் உலோகத்தால் ஆன பெண் தேவதை பாவை சிலை இருப்பதைக் கண்டார்.   இதுகுறித்து விஏஓ செங்குட்டுவன் மீன்சுருட்டி காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் கோடீஸ்வரன் அந்தச் சிலையை மீட்டு அது எப்படி கோவிலுக்குள் வந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai