Enable Javscript for better performance
ரசாயனக் கழிவு: வருவாய் அலுவலர்கள் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அருகேயுள்ள நிலத்தில் அனுமதியின்றி ரசாயனக் கழிவு கொட்டப்பட்டது குறித்து வருவாய்த் துறை அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.

      அரியலூர் அருகேயுள்ள அஸ்தினாபுரத்தை சேர்ந்தவர் ஜெயராமன். இவர் கயர்லாபாத்தில் உள்ள தனக்குச் சொந்தமான நிலத்தை ஓசூரை சேர்ந்த தனியார் நிறுவனத்திற்கு ஓராண்டுக்கு முன் குத்தகைக்கு அளித்தாராம்.

       அந்த இடத்தில் பெங்களூரு, சேலம் போன்ற பகுதியில் இருந்து மணலைக் கொண்டு வந்து, அதை சிமென்ட் ஆலைகளுக்கு விற்கப் போவதாக அந்தத் தனியார் நிறுவனத்தினர் தெரிவித்திருந்தனராம்.

      இந்நிலையில் அந்த நிலத்தில் சட்ட விரோதமாக ரசாயனக் கழிவுகள் கொட்டப்படுவதாக மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து வருவாய் ஆய்வாளர் சந்திரசேகர், விஏஓ தங்கராசு ஆகியோர் அங்கு செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனர்.

       அப்போது அந்த நிலத்தில் பொக்லின் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு ரசாயனக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்ததும், அதைக் கொண்டு வரப் பயன்படுத்தப்பட்ட சுமார் 200-க்கும் மேற்பட்ட காலி பேரல்கள் கிடந்ததும் தெரியவந்தது.

       இதையடுத்து அங்குள்ள மண்ணை ஆய்வுக்காக எடுத்துச் சென்று வட்டாட்சியர் பாலாஜிடம் ஒப்படைத்தனர்.

       மேலும், அப்பகுதியை சுகாதார துணை இயக்குநர், வேளாண் இணை இயக்குநர், ஆய்வகத் தொழில்நுட்பப் பணியாளர் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளவும் மாவட்ட ஆட்சியர் ப. செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai