அரியலூர்
கூட்டுறவுச் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் தேர்வு
அரியலூர் வேளாண் கூட்டுறவுச் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.அரியலூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின், நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்த திலகவதி உயிரிழந்தார்.
அரியலூர் வேளாண் கூட்டுறவுச் சங்க நிர்வாகக்குழு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
அரியலூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின், நிர்வாகக் குழு உறுப்பினராக இருந்த திலகவதி உயிரிழந்தார்.
அவரது காலியிடத்துக்கான தேர்தல் அண்மையில் நடைபெற்றது. இந்த இடத்துக்கு பெரியசாமியின் மனைவி நித்யா மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட நித்யாவுக்கு தேர்வுச் சான்றிதழை தேர்தல் அலுவலர் சொக்கலிங்கம் வழங்கினார்.
அப்போது அரியலூர் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத் தலைவர் ஆர். கண்ணன், செயலர் சுப்பிரமணியன், நிர்வாகக்குழு உறுப்பினர் வேலுசாமி உள்ளிட்டோர் உடனிருந்தார்.