Enable Javscript for better performance
அரியலூர் சாலைவிபத்து: ஒரே கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு, சோகத்தில் மூழ்கியது நாகல்குழி கிராமம் - Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் சாலைவிபத்து: ஒரே கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழப்பு, சோகத்தில் மூழ்கியது நாகல்குழி கிராமம்

    By அரியலூர்,  |   Published on : 01st June 2014 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூரில் வெள்ளிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் நாகல்குழி கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். இதனால் அந்தக் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

    அரியலூர் அருகே, ஓட்டக்கோவில் கிராமத்தில் அரசு நகரப் பேருந்தும், டேங்கர் லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்த நாகல்குழியைச் சேர்ந்த விவசாயி பாண்டியனின் மகள் சீதா(20), இவர் ஜயங்கொண்டம் அருகே உள்ள தத்தனூர் எம்ஆர்சி கல்வியியல் கல்லூரியில் பி.எட் படிப்பு படித்து வந்தார். வெள்ளிக்கிழமை அரியலூரில் நடைபெற்ற பி.எட் தேர்வை எழுதி விட்டு மீண்டும் ஊருக்கு திரும்பிய போது விபத்தில் சிக்கி உயிரிழந்தார். பாண்டியனுக்கு 3 மகள்களும் ஒரு மகனும் இருந்தனர். இதில் சீதா உயிரிழந்து விட்டார். சீதாவின் அக்காவை திருமணம் செய்து கொடுத்து விட்டார்கள். சீதா ஆசிரியர் படிப்பு படித்து பணியில் சேர்ந்துதான் குடும்பத்தை முன்னேற்றுவார் என்று பாண்டியன் அவரை படிக்க வைத்துக் கொண்டிருந்தார், அவர் இறந்தது அவரது குடும்பத்தில் மிகவும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அதே ஊரைச் சேர்ந்த பிச்சைபிள்ளை மகன் சுரேஷ்(25) பிச்சைபிள்ளை, இறந்து விட்டார். தாயாரின் பராமரிப்பில் இருந்த வந்தார், இவரும் 

    இவர் வீட்டுக்கு  ஒரே மகன் ஆவார், இவருக்கு 2 சகோதரிகள் உள்ளனர்.

    சுரேஷ் சென்னையில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். ஆசிரியர் பணிக்கு படிக்க வேண்டும் என்பதற்காக கடந்த ஒராண்டுக்கு முன்பு தனியார் நிறுவன பணியை ராஜினாமா செய்து விட்டு அரியலூருக்கு வந்து படித்து அரியலூரில் நடைபெற்ற பிஎட் தேர்வை எழுதி விட்டு  ஊருக்குத் திரும்பியவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். குடும்பத்தில்  இருந்த ஓரே ஆண் வாரிசை இழந்து விட்டோமே என்று அவரது சகோதரிகளும், உறவினர்களும் கதறி அழுதது கல் நெஞ்சையும் கரைப்பதாக இருந்தது.

    விபத்தில் உயிரிழந்த சரவணன் என்பவரது மனைவி ஜெயந்தி(27) இவரது சொந்த ஊர் செம்மண் பள்ளம் என்றாலும், அவர் 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி வந்தது, நாகல்குழி கிராமம்தான், இவரது கணவர் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார்.கடந்த 7 மாதங்களுக்கு முன்புதான் நாகல்குழியில் புதிய வீடு கட்டி கிரகப்பிரவேசம் நடத்தினர். இந்நிலையில் பிஎட் தேர்வு எழுதி விட்டு வந்த ஜெயந்தி விபத்தில் உயிரிழந்த தகவல் கேட்டு சிங்கப்பூரில் இருந்து வந்த சரவணன் கதறி அழுதார்.

    இவ்விபத்தில் சிக்கி உயிரிழந்த ராஜாக்கண்ணுவின் மனைவி ஆனந்தி(30)வசிப்பது உடையார்பாளையம் என்றாலும்  தனது தந்தை  ஊரான நாகல்குழியில் தனது நண்பர்களுடன் சேர்ந்து அரியலூருக்குச் சென்று தேர்வு எழுதி விட்டு வந்தபோது உயிரிழந்தார்.  ஆனந்திக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் ஆனந்தி 7 மாத கர்ப்பமாக இருந்தார். ஆசிரியை பணித் தேர்வுக்காக சென்றவர் சடலமாக திரும்பியது கண்டு  ஆனந்தியின் கணவர் மற்றும் உறவினர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ஒரே கிராமத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்ததும், ஆசிரிய தேர்வுக்காக சென்றவர்கள் என்பதாலும் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

    இந்த விபத்து குறித்து நாகல்குழியைச்சேர்ந்த  தேவேந்திரன் கூறும்போது, விபத்தில் உயிரிழந்தவர்கள் அனைவருமே ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அரசு நிவாரண உதவி வழங்குவதோடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றார்.

    மாடர்ன் கல்லூரி தாளாளர் ஜான்பீட்டர் கூறும்போது,  அரியலூர் மாவட்டத்தில் 10 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் அரியலூர் நகரில் மட்டும் தேர்வு மையம் அமைக்கப்படுகிறது.  இதனால் மாவட்டம் முழுவதும் இருந்து நூற்றுக்கணக்காணவர்கள் நீண்ட தூரம் பயணம் செய்ய வேண்டியுள்ளது, இவ்வாறு இல்லாமல் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கு தாலூகா அளவில் மையம் அமைப்பது போல் பிஎட் தேர்வுக்கும் அமைக்க வேண்டும் என்றார்.

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai