Enable Javscript for better performance
அரியலூர் சாலை விபத்தில் மேலும் ஒருவர் சாவு: இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் சாலை விபத்தில் மேலும் ஒருவர் சாவு: இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்வு

    By அரியலூர்  |   Published on : 01st June 2014 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூரில் வெள்ளிக்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் மேலும் ஒரு குழந்தை சனிக்கிழமை அதிகாலை இறந்தது, இதனால் இந்த சாலைவிபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.

    அரியலூரில் இருந்து செந்துறை நோக்கிச் சென்ற அரசு நகரப் பேருந்தும், செந்துறையில் இருந்து சிமென்ட் பவுடர் ஏற்றிக்கொண்டு வந்த டேங்கர் லாரியும், அரியலூரை அடுத்த ஓட்டக்கோவில் என்ற கிராமத்தில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே 7 பேர் உயிரிழந்தனர். மேலும் பலத்தக் காயமடைந்து சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒரு பெண்ணும், குழந்தையும், உயிரிழந்தனர். மேலும் மேல்சிகிச்சைக்காக  தஞ்சை  மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் 3 பேர் உயிரிழந்தனர்.

    இந்நிலையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நல்லாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளவரசனின் 11 மாதக் குழந்தை அபினேஷ் சனிக்கிழமை அதிகாலை உயிரிழந்தது. இதனால் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai