Enable Javscript for better performance
தா.பழூர் அருகே ஏரியில் மூழ்கி சிறுவன் சாவு- Dinamani

சுடச்சுட

    

    தா.பழூர் அருகே ஏரியில் குளிக்கச் சென்ற சிறுவன் மூழ்கி இறந்தார்.

    அரியலூர் மாவட்டம், தா.பழூரை அடுத்த காரைகுறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் வீரப்பன் கூலித்தொழிலாளி, இவரது மகன் விஷால்(7), இவர் அங்குள்ள ஏரியில் வெள்ளிக்கிழமை காலை குளிப்பதற்காக சென்றுள்ளார். மாலை வரை அவர் வீடு திரும்பவில்லை, பெற்றோரும், உறவினர்களும் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் சனிக்கிழமை காலை விஷாலின் உடைகள் ஏரிக்கரையில் கிடந்ததை பார்த்து விஷாலின் பெற்றோர்களிடம் தகவல் தெரிவித்தனர்.  அதைத் தொடர்ந்து ஏரியில் தேடிப்பார்த்த போது விஷால் ஏரியில் சேற்றில் மூழ்கி உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து விஷாலின் தாயார் சுதா தா. பழூர் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின்பேரில் உதவி ஆய்வாளர் காமராஜ் வழக்குப் பதிந்து விஷாலின் சடலத்தை ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai