Enable Javscript for better performance
மீன்சுருட்டி அருகே கார் மோதி மூதாட்டி சாவு- Dinamani

சுடச்சுட

    

    மீன்சுருட்டி அருகே கார் மோதி காயமடைந்த மூதாட்டி சனிக்கிழமை உயிரிழந்தார்.

    அரியலூர் மாவட்டம்,மீன்சுருட்டி அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த குப்புசாமி மனைவி கனகாயாள்(70) இவர் வியாழக்கிழமை காடுவெட்டி பேருந்து நிறுத்தத்திலிருந்து தனது வீட்டுக்கு கும்பகோணம்-- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத கார் இவர் மீது மோதியது.

    இதில் பலத்தக் காயமடைந்த  ஜயங்கொண்டம் கனகாயாள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் அங்கு அவர் சனிக்கிழமை உயிரிழந்தார். இது குறித்து மீன்சுருட்டி காவல் நிலைய ஆய்வாளர் வேலுசாமி வழக்குப் பதிந்து விசாரிக்கிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai