Enable Javscript for better performance
அரியலூர் அருகே  சாலை விபத்தில் 2 பேர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அருகே சனிக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
     அரியலூர் மாவட்டம்,வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் காசிநாதன் (45), இவரது மனைவி வெண்ணிலா (33), இவர்களது உறவினர் கீழ எசனையைச் சேர்ந்த அழகர் (40). இவர்கள் திருச்சி மாவட்டம், டால்மியாபுரம் அருகில் கருகமங்களம் கிராமத்தில் கால்நடைகளுக்கான கிடை போட்டுள்ளனர்.
     இந்நிலையில் சனிக்கிழமை இரவு இவர்கள் 3 பேரும் உறவினர் வீட்டு விசேஷத்துக்காக இருசக்கர வாகனத்தில் அரியலூர், வண்ணாரப்பேட்டைக்குச் சென்று கொண்டிருந்தனர்.
     கல்லகம் ரயில்வே கேட் அருகில் சென்றபோது இடையத்தக்குடியிலிருந்து டால்மியாபுரத்துக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றிச் சென்ற லாரி அவர்கள்மீது மோதியது. இதில் காசிநாதனும், அழகரும் உயிரிழந்தனர். காயமடைந்த வெண்ணிலா அரியலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து கீழப்பழூவூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai