Enable Javscript for better performance
இலவச கண் சிகிச்சை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அல்ட்ராடெக் சிமென்ட் ஆலை சார்பில் அண்மையில் நடைபெற்ற இலவச கண்சிகிச்சை முகாமில் 135 பேர் மேல் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்டனர்.
     அரியலூர் ரெட்டிப்பாளையம் அல்ட்ராடெக் சிமென்ட் ஆலை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைம் இணைந்து நடத்திய இந்த முகாம் ரெட்டிப்பாளையம் ஆதித்யா கிராமத்தில் நடைபெற்றது.
     முகாமை அல்ட்ராடெக் சிமென்ட் ஆலையின் தொழில்நுட்பத் துறைத் தலைவர் என். சீனிவாசராவ், சுரங்கத்துறைத் தலைவர் ஜி. ஜெயவேலு ஆகியோர் தொடக்கி வைத்தனர். முகாமில் அரவிந்த் கண் மருத்துவமனையைச் சேர்ந்த 17 பேர் கொண்ட குழுவினர் பரிசோதனை மேற்கொண்டனர்.
     இதில் 40-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த 383 பயனாளிகள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். இதில் 135 பேர் அறுவைச் சிகிச்சைக்குத் தேர்வு செய்யப்பட்டு மதுரை அரவிந்த கண் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். 80 பேருக்கு மூக்குக் கண்ணாடி வழங்கப்பட்டது.
     160 பேருக்கு மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.
     முகாமில் தொழிற்சாலை மருத்துவர்கள் சுந்தர், பிரிகிடா, தொழிற்சாலை அலுவலர்கள் ஜாய், சிவகுமார்,பாலகுரு, இந்திரா, ஸ்டீபன்,ஜி.கே. சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அல்ட்ராடெக் சிமென்ட் ஆலையின் கிராம மேம்பாட்டுத் துறை செய்தது.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai