Enable Javscript for better performance
புதிய தொழில் முனைவோருக்கு அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் தொழில் தொடங்கிட விண்ணப்பிக்கலாம்.
     இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அரியலூர் மாவட்டத்தில் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.
     பொதுப்பிரிவினருக்கு 21 முதல் 35 வயது வரையும், சிறப்புப் பிரிவினருக்கு 21 முதல் 35 வயது வரையும் இருக்கலாம். பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு, ஐடிஐ, அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்களில் பெறப்பட்ட தொழில் பயிற்சிச் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளாக வசிப்பவராக இருக்க வேண்டும். வருமான உச்ச வரம்பு இல்லை, ஒன்றுக்கு மேற்பட்டோர் சேர்ந்து பங்குதாரர் நிறுவனமாகவும் தொடங்கலாம்.
     அரியலூர் மாவட்டத் தொழில் மையத்தில் பெற்று நிறைவு செய்து உரிய இணைப்புகளுடன் பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஆட்சியரைத் தலைவராகக் கொண்ட மாவட்ட அளவிலான தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்படும்.
     இத்திட்டத்தில் ரூ. 5 லட்சம் முதல் அதிகப்பட்சமாக ரூ.10 லட்சம் வரை முதலீட்டில் தொடங்கப்படும் தொழில் நிறுவனங்களுக்கு 25 சத மானியம் கணக்கிட்டு அளிக்கப்படும். மேலும் வங்கிக்கடனில் 3 சத வட்டி பின்முனை மானியமாகவும் வழி செய்யப்பட்டுள்ளது.
     அரியலூர் மாவட்டத்துக்கு 2014- 15 ஆம் ஆண்டில் 15 தொழில் முனைவோர் தொழில் தொடங்க ரூ. 150 லட்சம் மானியத்துடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
     எனவே ஆர்வமுள்ள தொழில் முனைவோர் அரியலூரில் உள்ள மாவட்டத் தொழில் மையத்தை 04329- 224555, 9443413897 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai