Enable Javscript for better performance
மொபெட் திருட்டு: மூன்று பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே மோட்டார்சைக்கிள்கள் திருடிய மூன்று பேரை ஆண்டிமடம் போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
     ஆண்டிமடம் பகுதியில் கடந்த சில நாட்களாக மோட்டார்சைக்கிள்கள் திருடு போயின. இதையடுத்து ஜயங்கொண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் வின்சென்ட் ஜயராஜ் உத்தரவின்பேரில் காவல் ஆண்டிமடம் காவல் ஆய்வாளர் கண்ணன், காவல் உதவி ஆய்வாளர் அழகிரி உள்ளிட்டோர் சனிக்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
     அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த இருவரை விசாரித்தபோது அவர்கள் வந்தது திருட்டு வாகனம் என்பது தெரியவந்தது. மேலும் விசாரனையில் அவர்கள் விழுப்புரம் மாவட்டம் நயினார்பாளையத்தை சேர்ந்த நா. சின்னையன் (31), வே. பழனிவேல்(32) என்பதும், இருவரும் கடலூர் மாவட்டம், பெண்ணாடம் நாராயணமூர்த்தியுடன் (31) சேர்ந்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 6 மோட்டார்சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
     இதையடுத்து 3 பேரும் கைது செய்யப்பட்டு ஜயங்ண்டம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி முத்துமுருகன் இருவரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai