Enable Javscript for better performance
குறைதீர் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் நாள் கூட்டத்தில் ரூ. 22 லட்சத்து 73 ஆயிரத்து 860 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வழங்கினார்.

    கூட்டத்தில் முதல்வரின் சிறப்புத் திட்டத்தின் கீழ் அரியலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பயிலும் 7 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், சீருடை, மற்றும் கல்வி உபகரணங்களையும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் நலிந்தோர் நலத்திட்ட நிதியுதவியாக தலா ரூ. 10 ஆயிரம் வீதம் ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான காசோலைகளை 5 பேருக்கும், ஆட்சியர் வழங்கினார்.

    மேலும் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் 11 பேருக்கு தலா ரூ.45 ஆயிரம் வீதம் ரூ.49,500 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 15 பேருக்கு தலா ரூ.3,424 வீதம் ரூ.51,360 மதிப்பிலான விலையில்லா தையல் இயந்திரம், கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் கோழி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தமிழக அரசின் 25 சத முன் மானியத் தொகை 10 பயனாளிகளுக்கு தலா ரூ.2 லட்சத்து 62 ஆயிரத்து 500 வீதம் ரூ.26 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பிலான காசோலை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 14 பேருக்கு ரூ. 61 ஆயிரம் மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், இலவச சக்கர நாற்காலிகள், ஊன்றுகோல் போன்ற உபகரணங்கள் என மொத்தம் ரூ.22 லட்சத்து 73 ஆயிரத்து 860 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கினார்.

    கூட்டத்தில் பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஆட்சியர் அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சடையப்ப விநாயகமூர்த்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் முஸ்தபாகமால் பாட்ஷா(பொது),சீனிவாசன் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்), அரியலூர் வட்டாட்சியர் முருகன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூரில்... பெரம்பலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்திற்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை 314 மனுக்களைப் பெற்று நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரை வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் வி. ராஜன்துரை, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் முருகேஸ்வரி, உதவித் திட்ட அலுவலர் குமரன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai