Enable Javscript for better performance
வாக்காளர்களுக்கு அதிமுக நன்றி- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் செங்குந்தபுரத்தில் மக்களவைத் தேர்தலில் வாக்களித்தோருக்கு நன்றி அறிவித்தல் மற்றும் அதிமுக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

    அதிமுக ஜயங்கொண்டம் நகரச் செயலரும் நகர்மன்றத் துணைத் தலைவருமான பி.ஆர். செல்வராஜ் தலைமை வகித்தார். திருவள்ளுவர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் கே.பி. அழகேசன், நகர்மன்ற உறுப்பினர் கே. அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறைச் செயலர் ஆர். கோகுல், தலைமைக் கழகப் பேச்சாளர்கள் முருகேசன், மு. ஜமால், ஜி. முருகேசன் உள்ளிட்டோர் பேசினர்.

    மாவட்டத் தொழிலாளர் சங்க இணைச்செயலர் எஸ். ஜெயசங்கர், இ.எஸ். செல்வராஜ், தேவா, க. பாண்டியன், செல்வராஜ், நகர எம்.ஜி.ஆர் மன்ற இளைஞரணித் தலைவர் தங்க. பாண்டியன், நகர்மன்ற உறுப்பினர்கள் கே.பி. தண்டபாணி, ஜி. ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    தலைமைக் கழகப் பேச்சாளர் தீப்பொறி ராமலிங்கம் வரவேற்றார். நகர்மன்ற உறுப்பினர் சி. சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai