Enable Javscript for better performance
விபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் தேவை- Dinamani

சுடச்சுட

    

    விபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம் தேவை

    By dn  |   Published on : 03rd June 2014 02:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூரில் நேரிட்ட சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணமும், அரசு வேலையும் வழங்க வேண்டும் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன்.

    இதுகுறித்து அரியலூரில் அவர் திங்கள்கிழமை மேலும் கூறியது:

    கடந்த மக்களவைத் தேர்தலில் இந்தியா முழுவதும் மோடி அலை வீசியதாகக் கூறுகிறார்கள், ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அதிமுக 37 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மதச்சார்பற்ற கட்சிகளான திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மற்றும் பகுஜன்சமாஜ் கட்சிகள் பிரிந்து நின்று போட்டியிட்டதால்தான் பாஜக வெற்றி பெற்றது. ஊழலால்தான் காங்கிரஸ் தோல்வியடைந்தது என்றால், அதிமுகவும், பாஜகவும் ஊழல் செய்யவில்லையா? பாஜகவின் இன்னொரு முகம்தான் அதிமுக. மதவாதக் கட்சிகள் எல்லாம் தற்போது ஒன்று சேர்ந்துள்ளன.

    அரியலூர் சாலை விபத்தில் உயிரழந்தோரின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் வழங்குவதாகத் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தத் தொகை போதுமானதல்ல, ரூ. 10 லட்சம் வழங்க வேண்டும், மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும்.

    தமிழ்நாட்டில் உள்ள நீதிமன்றங்களில் தேசியத் தலைவர் என்ற முறையில் அம்பேத்கர் படம் வைக்க வேண்டும். இதற்கு உச்ச நீதீமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai