Enable Javscript for better performance
அரியலூர் விபத்து:  மேலும் ஒருவர் சாவு,  இறந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் விபத்து:  மேலும் ஒருவர் சாவு,  இறந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்வு

    By  அரியலூர்  |   Published on : 04th June 2014 10:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் அருகே கடந்த 30-ம் தேதி அரசு நகரப் பேருந்தும் - டேங்கர் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் காயமடைந்து தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார். இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது.
     அரியலூரில் இருந்து கடந்த 30-ம் தேதி மாலை ஒரு அரசு நகரப் பேருந்து செந்துறை நோக்கி சென்றது. ஓட்டக்கோவில் கிராமத்தின் அருகே ஒரு திருப்பத்தில் பேருந்து திரும்பியபோது எதிரே சிமெண்ட் பவுடர் ஏற்றி வந்த டேங்கர் லாரியுடன் நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் 9 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
     பலத்த காயமடைந்த 35 பேர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும், அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் சாந்தி, சீதா ஆகியோர் இறந்தனர். தொடர்ந்து தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளவரசன், நல்லாம்பாளையம் சாந்தியின் மகன் 8 மாதக் குழந்தையான அபினேஷ் ஆகியோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற சுகாதார கல்வியாளர் அன்பழகன் (58) திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தார்.
     இதையடுத்து, இந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த 5 பெண்கள் உள்பட 12 பேர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai