மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் ஆய்வு
By அரியலூர், | Published on : 04th June 2014 10:38 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரியலூரில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் மழைநீர் சேகரிப்புத்
தொட்டிக்கான கட்டமைப்புப் பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகக் கட்டடங்களிலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஜூன் மாதம் 30-ம் தேதிக்குள் ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, அரியலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடத்தில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி ரூ. 5 ஆயிரம் மதிப்பீட்டில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி புதிதாக அமைக்கப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதையும், கொல்லாபுரம் ஊராட்சியில் பகுதி நேர அங்காடி கட்டடத்தில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்புத் தொட்டியின்
பராமரிப்பு குறித்தும் நேரில் பார்வையிட்டு, ஆட்சியர் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சடையப்ப விநாயகமூர்த்தி, செயற்பொறியாளர் அருள்மொழி, வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.