Enable Javscript for better performance
அரியலூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தக் கோரி ஆர்ப்பாட்டம்

    By அரியலூர்  |   Published on : 05th June 2014 04:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் அரசு மருத்துவமனையை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தக் கோரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலாளர் டி. தண்டபாணி தலைமை வகித்தார்.

    கோரிக்கைகள்: அரியலூர் அரசு மருத்துவமனையை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த வேண்டும். இதுகுறித்து 2012 ஆம் ஆண்டு மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் முதல்வர் அறிவித்ததை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

    இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலாளர் ஆர். உலகநாதன், ஏஐடியுசி மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஆர். தில்லைவனம், அரியலூர் பகுதிக்குழு பொருளாளர் ஜி. ராஜேந்திரன், ரெ. நல்லுசாமி, மாதர் தேசிய சம்மேளனத்தைச் சேர்ந்த பி. வளர்மதி, பெரம்பலூர் விவசாய தொழிலாளர் சங்கச் செயலாளர் கே. காசிநாதன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.

    அரியலூர் நகராட்சி சுகாதார தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த ஆர். சுப்பிரமணியன், க. பெருமாள், ச. செல்வராணி, பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகரக் கிளை ராமதாஸ், பழனிச்சாமி உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai