Enable Javscript for better performance
57 ஆயிரம் மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள்- Dinamani

சுடச்சுட

    

    57 ஆயிரம் மாணவர்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள்

    By அரியலூர்,  |   Published on : 05th June 2014 04:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள 139 அரசுப் பள்ளிகளில் பயிலும் 57 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தெரிவித்தார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஜூன் 2 ஆம் தேதியன்றே செயல்படத் தொடங்கின. அரசு உதவிபெறும், சுயநிதி உயர்நிலை மற்றும் மேல்நிலையைச் சேர்ந்த 139 பள்ளிகளில் பயில்கின்ற 27,294 மாணவர்களுக்கும், 29,014 மாணவிகளுக்கும் விலையில்லா பாடப்புத்தகங்களும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10 ஆம் வகுப்பு வரை பயில்கின்ற 48,004 மாணவ, மாணவிகளுக்கு பாடக் குறிப்பேடுகளும், சத்துணவு உண்ணும் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகள் 20,821 பேருக்கு விலையில்லா சீருடைகளும் பள்ளி திறந்த ஜூன் 2 ஆம் தேதியன்றே அந்தந்தப் பள்ளிகள் மூலம் வழங்கப்பட்டன.

    அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் எ. சரவுணவேல்ராஜ் விலையில்லா பாடப் புத்தகங்கள், விலையில்லா பாடக் குறிப்பேடுகள் மற்றும் விலையில்லா சீருடைகளை வழங்கினார். முன்னதாக, அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் அரசின் விலையில்லா நலத்திட்டப் பொருள்கள் வழங்கப்படுவதை அனைவருக்கும் கல்வித் திட்ட இணை இயக்குநர் கருப்புசாமி, அரியலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ. மதிவாணன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் யுவராஜ், சிவானந்தம் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai