Enable Javscript for better performance
உலக சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி- Dinamani

சுடச்சுட

    

    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு அரியலூர் மாவட்டம் தா. பழூர் ஊராட்சி ஒன்றியம் கோரைகுழி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

    பேரணிக்கு பள்ளி தலைமையாசிரியர் சொ. மனோகரன் தலைமை வகித்தார். கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் க. ராசாத்தி தொடக்கி வைத்தார். பள்ளியில் இருந்து புறப்பட்டு இப்பேரணி கீழத்தெரு, நடுத்தெரு, வடக்குத்தெரு வழியாக வந்து மீண்டும் பள்ளியில் நிறைவடைந்தது. பேரணியின் போது மாணவர்கள் மழைத்துளி உயிர்த்துளி, இயற்கையை காப்போம் இன்பமுடன் வாழ்வோம் என முழக்கமிட்டவாறு சென்றனர்.

    முன்னதாக மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஓவியப் போட்டி நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியர்கள் எஸ். நடராஜன், ம. உமா, நெ. வானதி, அ. இளையராஜா, க. பேபிராணி, கோ. சிவசங்கரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai