Enable Javscript for better performance
காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதாக ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    மீன்சுருட்டி அருகே காவல் உதவி ஆய்வாளரை தாக்கியதாக ஒருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார்.

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா (எ) காஜாமொய்தீன் (37). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் இவர் மீன்சுருட்டி பகுதியில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு சென்ற

    மீன்சுருட்டி காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தமிழரசன் அவரைக் கைது செய்ய முயன்றுள்ளார்.

    அப்போது காஜாமொய்தீன் தமிழரசனை இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதில் காயமடைந்த தமிழரசன் ஜயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது தொடர்பாக மீன்சுருட்டி காவல் ஆய்வாளர் வேலுசாமி வழக்குப் பதிந்து காஜாமொய்தீனை கைது செய்து விசாரித்து வருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai