Enable Javscript for better performance
சாலை விபத்தில் முதியவர் காயம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அருகே வியாழக்கிழமை விபத்தில் முதியவர் காயமடைந்தார்.

    திருச்சி மாவட்டம், பூவாளுர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (60). இவர் வியாழக்கிழமை அரியலூர் மாவட்டம், வி. கைகாட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது காத்தான்குடிக்காடு கிராமத்தைச் சேர்ந்த கொளஞ்சிநாதன் (39) ஓட்டி வந்த இருசக்கர வாகனம் கோவிந்தராஜ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவர் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் கயர்லாபாத் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் பாண்டியன் கொளஞ்சிநாதனை கைது செய்து விசாரிக்கிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai