Enable Javscript for better performance
ஜயங்கொண்டத்தில் எலக்ட்ரானிக் கடையில் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    ஜயங்கொண்டத்தில் எலக்ட்ரானிக் கடையில் திருட்டு

    By ஜயங்கொண்டம்  |   Published on : 06th June 2014 04:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டத்தில் எலக்ட்ரானிக் கடையின் பூட்டை உடைத்து மடிக்கணினி உள்ளிட்ட பொருள்களை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

    அரியலூர் மாவட்டம் ஜயங்கொண்டம் வேலாயுதம் நகரைச் சேர்ந்தவர் அருள் (39). இவர் ஜயங்கொண்டம் பேருந்து நிலைய சாலையில் எலக்ட்ரானிக் கடை வைத்துள்ளார்.

    புதன்கிழமை இரவு 8.00 மணியளவில் வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றார். இந்நிலையில் கடையில் வேலை பார்க்கும் பிரசன்னா என்பவர் வியாழக்கிழமை காலையில் கடைக்கு வந்துள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து இருந்துள்ளது.

    உடனே பிரசன்னா இதுகுறித்து அருளுக்கு தகவல் தெரிவித்தார்.

    இதையடுத்து அங்கு வந்த அருள் கடைக்குள் சென்று பார்த்தபோது 2 மடிக்கணினிகள் உள்ளிட்ட பொருள்கள் காணாமல் போனது தெரியவந்தது.

    இதுகுறித்து ஜயங்கொண்டம் காவல் நிலையத்தில் அருள் அளித்த புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் ரபீக்ஹுசேன் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai