Enable Javscript for better performance
ஜூன் 10-ல் அரியலூர் படைபத்து மகாமாரியம்மன் கோயில் தேரோட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஜூன் 10-ல் அரியலூர் படைபத்து மகாமாரியம்மன் கோயில் தேரோட்டம்

    By அரியலூர்  |   Published on : 06th June 2014 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் படைபத்து மகாமாரியம்மன் கோயில் தேரோட்டம் ஜூன் 10-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.

    அரியலூர் மேலத்தெருவில் எழுந்தருளியுள்ள படைபத்து மகாமாரியம்மன் கோயில் திருவிழா ஜூன் 2-ம் தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டு காப்புக் கட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து அம்மன் அன்னவாகனம், புன்னைமர வாகனம், நாகபாசனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    வெள்ளிக்கிழமை (ஜூன் 6) இரவு 7 மணிக்கு படத்தேர் உத்சவமும், யானை வாகனத்தில் திருவீதியுலாவும் நடைபெறுகிறது.

    இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் வடம்பிடித்தல் செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) காலை 8 மணிக்கு மேல் நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து ஜூன் 12-ம் தேதி இரவு 7 மணிக்கு ஏகாந்த சேவையும், 13-ம் தேதி மஞ்சள் நீர் விளையாட்டு உத்சவமும், 14-ம் தேதி 108 சங்காபிஷேகத்துடன் விடையாற்றி உத்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. பூஜைகளை சரவணன் சிவாச்சாரியார் நடத்துகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai