Enable Javscript for better performance
ஜூன் 30-க்குள் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்க அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    ஜூன் 30-க்குள் மழைநீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைக்க அறிவுறுத்தல்

    By அரியலூர்,  |   Published on : 06th June 2014 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் மழைநீர் சேகரிப்பு அமைப்புகளை

    ஜூன் 30-ம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று அலுவலர்களுக்கு ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

    அரியலூர் மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் முதல்வரின் உத்தரவுப்படி மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை அனைத்து அரசு அலுவலகங்களிலும் அமைப்பது தொடர்பாகவும், ஏற்கெனவே அமைக்கப்பட்ட மழைநீர் சேகரிப்புத் தொட்டிகளை 100 சதவீதம் செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

    இக்கூட்டத்தில் தமிழக முதல்வரின் உத்தரவுப்படி அனைத்து அரசு அலுவலக கட்டடங்களிலும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை வருகிற 30-ம் தேதிக்குள் ஏற்படுத்திட அலுவலர்கள் தகுந்த பணிகளை விரைந்து செய்ய வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆங்காங்கே சுவரொட்டிகள் மூலம் விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் அலுவலர்களை ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

    மேலும் அனைத்துப் பள்ளிகளிலும், பள்ளி மாணவர்கள் மூலம் பொதுமக்களுக்கு சென்றடையும் வகையில் மழைநீர் சேகரிப்பு குறித்த தகவல்களை மாணவர்களுக்கு விளக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    அனைத்துப் பேருந்துகள் மற்றும் வாகனங்களில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கை வில்லைகளை ஒட்டும் பணிகளை சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் அனைத்து அலுவலகங்கள் வர்த்தக நிறுவனங்கள் பொதுமக்களின் இல்லங்களில் 100 சதவீதம் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைத்து மழைநீர் வீணாகாமல் சேமித்திடவும், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திடவும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.

    கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சடையப்ப விநாயகமூர்த்தி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஸ்தபாகமால்பாட்சா, செயற்பொறியாளர்கள் விஜயராகவன், (தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம்), தேவேந்திரன் (மின்சார வாரியம்), முதன்மை கல்வி அலுவலர் பெ. மதிவாணன் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai