Enable Javscript for better performance
நிர்வாகிகள் தேர்வு- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் அண்மையில் தேர்வு செய்யப்பட்டனர்.

    அரியலூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இத்தேர்தலுக்கு ஆணையராக பெரம்பலூர் மாவட்டத் தலைவர் கோ. ராமமூர்த்தி செயல்பட்டார். பெரம்பலூர் மாவட்ட கவுரவத் தலைவர் ஏ.வி.இ. பாபுவாணன் முன்னிலை வகித்தார். இதில், மாவட்டத் தலைவராக அருங்கால் ஆ. முருகேசன், மாவட்டச் செயலராக செங்குந்தபுரம் எஸ். முத்தமிழ்ச்செல்வன், பொருளாளராக தளவாய் ஆர். கலைச்செல்வன், துணைத் தலைவர்களாக மாவட்டக்

    கல்வி அலுவலர் இரா. பழனிச்சாமி, விளந்தை

    கே. சுப்பிரமணியன், அமைப்புச் செயலராக

    உடையார்பாளையம் ஏ. செல்வக்குமார்,

    இணைச் செயலராக பரணம்டி.ஆர். அன்பழகன், மாவட்ட மகளிர் அணிச் செயலராக அரியலூர் வை. பத்மாவதி, இணைச் செயலராக காட்டுப்பிரிங்கியம் நா. லதா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai