Enable Javscript for better performance
அரியலூர் மாவட்டத்தில் வாகனச் சோதனை- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை போக்குவரத்துத் துறையினர் நடத்திய சோதனையில் விதிகளை மீறிய 57 வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அரியலூர் அருகே கடந்த 30-ம் தேதி நேரிட்ட சாலை விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, அரியலூர் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் உத்தரவின்பேரில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அரியலூர் மாவட்டத்தில் தேளூர், வி. கைகாட்டி, ஓட்டக்கோவில், விளாங்குடி, அரியலூர் புறவழிச்சாலை ஆகிய 5 இடங்களில் வாகனச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் வாகன விதிமுறைகளை பின்பற்றாத 57 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, அரியலூர் மாவட்டம், கீழப்பழூவூர் சாலையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி, அரியலூர் சார் ஆட்சியர் (பொறுப்பு) மோகன் ஆகியோர் தலைமையில் அலுவலர்கள் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.

    அப்போது, அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி உரிய ஆவணங்களை சரிபார்த்தனர். மேலும், வாகன ஓட்டுநர்களிடம் சீருடை அணிந்து வர வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்று அறிவுறுத்தினர்.

    இதேபோல், அரியலூர் புறவழிச்சாலையில் நடைபெற்ற வாகனச் சோதனையில் உடையார்பாளையம் வருவாய்க் கோட்டாட்சியர் கருணாகரன், ஓட்டக்கோவிலில் நடைபெற்ற வாகனச் சோதனையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முஸ்தபா கமால்பாட்ஷா ஆகியோர் தலைமையில் அலுவலர்கள் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த ஆய்வுகளின்போது, போக்குவரத்து ஆய்வாளர் சரவணபவன், வட்டாட்சியர் வைத்தியநாதன் மற்றும் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.

    வாகனங்களின் விளக்குகளில்

    கறுப்பு வில்லை ஒட்டும் பணிகீழப்பழூவூரில் வாகனங்களின் முகப்பு விளக்குகளில் கறுப்பு வில்லை ஒட்டும் பணியை தொடக்கிவைக்கும் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக்.அரியலூர், ஜூன் 6: அரியலூர் மாவட்டத்தில் வாகனங்களின் முகப்பு விளக்குளில் கறுப்பு வில்லை ஒட்டும் பணியை ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் தொடக்கி வைத்தார். அரியலூர் மாவட்டம், கீழப்பழூவூரில் வாகன விதிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்திட மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக் முன்னிலையில் அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் நான்கு சக்கர வாகனங்களில் முன்புற விளக்குகளில் கறுப்பு வில்லைகள் ஒட்டும் பணிகளை தொடக்கி வைத்தார். இந்நிகழ்வின்போது, வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அழகிரிசாமி, போக்குவரத்து ஆய்வாளர் (மோட்டார் வாகனம்) சரவணபவன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai