Enable Javscript for better performance
ஜயங்கொண்டத்தில் குடிநீர் கேட்டு சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    ஜயங்கொண்டத்தில் குடிநீர் கேட்டு சாலை மறியல்

    By ஜயங்கொண்டம்,  |   Published on : 07th June 2014 04:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டத்தில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    ஜயங்கொண்டம் நகராட்சிக்குள்பட்ட மலங்கன்குடியிருப்பு இருளர் தெருவில் கடந்த சிலநாள்களாக குடிநீர் முறையாக விநியோகிக்கப்படவில்லை. குறைந்த அளவில் வழங்கப்படும் குடிநீரும் மிகவும் அசுத்தமாக மஞ்சள் நிறத்தில் உள்ளது.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் நகர்மன்ற உறுப்பினரிடமும், நகராட்சி அலுவலகத்திலும் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சீனிவாசநகர் அருகே திருச்சி - சிதம்பரம் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

    தகவலறிந்த ஜயங்கொண்டம் காவல் ஆய்வாளர் அன்பழகன் உள்ளிட்ட போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, மறியல் கைவிடப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai