Enable Javscript for better performance
பள்ளியில் சூற்றுச்சூழல் தின விழா- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அருகே பள்ளியில் சூற்றுச்சூழல் தின விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

    அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த மருவத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சுற்றுச் சூழல் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு மருவத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் து. காசிநாதன் தலைமை வகித்தார்.

    விழாவை முன்னிட்டு, மாணவ, மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இதில், சுற்றுச்சூழலை பாதுகாப்போம், சுகாதாரமாக வாழ்வோம், மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள்

    ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் முழங்கப்பட்டது.

    பின்னர், பள்ளித் தலைமை ஆசிரியர் சா. தங்கசாமி மற்றும் மாணவ, மாணவிகள், வேம்பு, புங்கன், பாதாம் போன்ற மரக்கன்றுகளை நட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai