Enable Javscript for better performance
அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் அரசு விடுதிகளில் சேர விண்ணப்பிக்கலாம்.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    தமிழ்நாடு அரசால் அரியலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் மற்றும் மாணவிகளுக்கென மொத்தம் 32 விடுதிகள் செயல்படுகின்றன.

    பள்ளி மாணவர்களுக்காக 20 விடுதிகளும், மாணவிகளுக்காக 9 விடுதிகளும், கல்லூரி மாணவர்களுக்காக 2 விடுதிகளும், மாணவிகளுக்காக 1 விடுதியும் செயல்படுகிறது.

    பள்ளி விடுதிகளில் 4 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களும் கல்லூரி விடுதிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு மற்றும் பாலிடெக்னிக் பயிலும் மாணவ, மாணவிகளும் சேரத் தகுதியுடையவர்கள்.

    அனைத்து விடுதி மாணவ, மாணவிகளுக்கும் உணவு, தங்கும் வசதி அளிக்கப்படும். பெற்றோர் மற்றும் பாதுகாவலரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும் .

    இருப்பிடத்திலிருந்து பயிலும் கல்வி நிலையத்தின் தொலைவு குறைந்த பட்சம் 8 கி.மீக்கு மேல் இருக்க வேண்டும் இந்த தொலைவு விதி மாணவிகளுக்குப் பொருந்தாது.

    தகுதியுடைய மாணவ, மாணவிகள் சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளர் அல்லது, காப்பாளினிகளிடமிருந்தோ அல்லது மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலிருந்தோ விண்ணப்பங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

    நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பள்ளி விடுதிகளைப் பொறுத்தவரை சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளர் அல்லது மாவட்ட

    பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் ஜூலை 15-க்குள்ளாக சேர்ப்பிக்க வேண்டும்.

    அனைத்து விடுதியிலும் முகாம்வாழ் இலங்கை தமிழர்களின் குழந்தைகளுக்கென கூடுதலாக 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

    எனவே அரசுப் பள்ளிகள் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு கல்லூரிகளில் பயிலும் மற்றும் அரசுப் விடுதிகளில் தங்கிப் பயில முழு விருப்பம் உள்ள அனைத்துப் மாணவ, மாணவிகளும் அரசின் இச்சலுகைகளை பெற்று பயனடையலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai