Enable Javscript for better performance
அரியலூர் அரசுக் கல்லூரியில் நாளை மாணவர் சேர்க்கை தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அரியலூர் அரசுக் கல்லூரியில் நாளை மாணவர் சேர்க்கை தொடக்கம்

    By அரியலூர்  |   Published on : 08th June 2014 04:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் அரசுக் கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை திங்கள்கிழமை (ஜூன் 9) தொடங்குகிறது.

    இதுகுறித்து கல்லூரி பொறுப்பு முதல்வர் சா. சிற்றரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:

    இந்தக் கல்லூரியில் முதல் சுழற்சியில் இளங்கலை வரலாறு, தமிழ், ஆங்கிலம், பொருளியல், வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகளும், இளங்கலை அறிவியல், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளும் உள்ளன.

    இரண்டாம் சுழற்சியில் இளங்கலை தமிழ், வணிகவியல், கணினி அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளும் உள்ளன.

    இவற்றில் சேர பெறப்பட்ட விண்ணப்பங்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டு, இனச் சுழற்சி அடிப்படையில் ஒற்றைச் சாளர முறையில் பட்டியல் தயாரிக்கப்பட்டு கல்லூரி அறிவிப்புப் பலகையில் ஓட்டப்பட்டுள்ளது.

    பி.ஏ. ஆங்கிலம் பாடப்பிரிவுக்கு ஜூன் 9 ஆம் தேதியும், பி.எஸ்சி அனைத்துப் பாடப்பிரிவுகளுக்குக்கும் ஜூன் 10 ஆம் தேதியும், பி.காம் வணிகவியல் பாடப்பிரிவுக்கு ஜூன் 13 ஆம் தேதியும் பி.ஏ. தமிழ், வரலாறு, பொருளியல் பாடங்களுக்கு ஜூன் 16 ஆம் தேதியும் மாணவர்களின் சேர்க்கை காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது.

    விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் மேலே கண்ட நாட்களில் வர வேண்டும். சேர்க்கை பற்றித் தனியாக கடிதம் எதுவும் அனுப்பப்பட மாட்டாது.

    மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களின் தரவரிசைப் அடிப்படையில் இனச் சுழற்சிப்படி ஒற்றைச் சாளர முறையில் மாணவர்கள் வரிசைப்படி அழைக்கப்பட்டு சேர்க்கப்படுவர்.

    சேர்க்கை நாளன்று வரவில்லை என்றாலும் காலதாமதமாக வந்தாலும் சேர்க்கை வாய்ப்பு கிடைக்காது.

    உரிய தேதிக்குப் பிறகு விண்ணப்பித்தோரும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். அவர்களுக்கு இடம் இருந்தால் மட்டுமே சேர்க்கை வழங்கப்படும் கலந்தாய்வுக்கு வரும் மாணவர்கள் பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் வர வேண்டும். அத்துடன் பிள்ஸ் 2 மதிப்பெண் மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றைக் கொண்டு வர வேண்டும். அவர்கள் செலுத்த வேண்டிய கட்டண விவரமும் விண்ணப்பத்தகவல் தொகுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai