சுடச்சுட

  

  அரியலூர் - ஒட்டக்கோவில் இடையே 8 கி.மீ. தொலைவிலான புதிய இருவழி ரயில் பாதையில் சோதனை ஓட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

  சென்னையில் இருந்து திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை போன்ற தென் மாவட்டங்களுக்குச் அரியலூர், திருச்சி வழியாகச் செல்லும் கார்டுலைனில் அரியலூரில் இருந்து வாளாடி வரையுள்ள ரயில் நிலையங்களில் கிராசிங்குக்காக ரயில்கள் நிற்பதால் பயண நேரம் அதிகமானது. 

  இதைக் கருத்தில் கொண்டு அரியலூரில் இருந்து வாளாடி வரை 50 கி.மீ. தொலைவுக்கு ரூ. 160 கோடியில் இருவழி மின் ரயில் பாதை அமைக்கும் பணி தொடங்கியது.

  இதில் முதல்கட்டமாக கல்லக்குடியில் இருந்து வாளாடி வரை பணி நிறைவுற்ற இரு பாதைகளிலும் ரயில்கள் சென்று வருகின்றன. அதேபோல கல்லக்குடியிலிருந்து அரியலூர் வரை பணிகள் நிறைவுற்றுள்ளன.

  அரியலூரில் இருந்து ஒட்டக்கோவில் வரையுள்ள எஞ்சியுள்ள 8 கி.மீ. தூரத்துக்கும் புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டு அதில் ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

  இதற்காக நடைபெற்ற சிறப்பு பூஜையில் ரயில்வே விகாஸ் லிமிடெட் மேலாளர் பெருமாள், உதவி மேலாளர் சரவணன்,திட்ட மேலாளர் மூர்த்தி, திட்டப் பொறியாளர் தண்டபாணி, எல்அண்ட் டி நிறுவன முதுநிலைப் பொறியாளர்  வெங்கடேசன், மேலாளர் ஜெகதீசன், மற்றும் ரயில்வே  ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து டீசல் என்ஜின் 20 கி.மீ. வேகத்தில் அரியலூர் வரை வந்து பின்பு மீண்டும் ஒட்டக்கோவிலுக்கு திரும்பிச் சென்றது.

  வரும் 16 ஆம் தேதி அரியலூர் - கல்லக்குடி இடையேயான புதிய இருவழி ரயில் பாதையை ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மிட்டல் ஆய்வு செய்து சான்றளித்த பின்னர், அரியலூரில் இருந்து வாளாடி வரை 50 கி.மீ. தூரத்துக்கு இருவழி பாதையில் ரயில்கள் செல்லும். இதனால் பயண நேரம் ஒரு மணி நேரம் வரை குறையும் என்று  கூறப்படுகிறது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai