சாலை விபத்தில் விவசாயி சாவு
By அரியலூர் | Published on : 10th June 2014 05:12 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அரியலூரில் திங்கள்கிழமை நேரிட்ட சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.
அரியலூர் அருகேயுள்ள பள்ளகிருஷ்ணாபுரம் தெற்குத் தெருவைச் சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி (46), விவசாயி.
இவர் திங்கள்கிழமை அரியலூரில் நடைபெற்ற உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு வந்து விட்டு மொபெட்டில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அரியலூர் பிள்ளையார் கோயில் தெரு திருப்பத்தில் வந்தபோது எதிரே வந்த அரசுப் பேருந்துக்கு வழிவிட ஒதுங்கியபோது சாலையோரப் பள்ளத்தில் மொபெட் கவிழ்ந்து பேருந்தில் அடிபட்டு உயிரிழந்தார்.
இதுகுறித்து அரியலூர் நகரக் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.