Enable Javscript for better performance
அரியலூரில் மழைநீர் சேகரிப்பு தகவல் மையம் ஆட்சியர் தொடங்கிவைத்தார் - Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் மழைநீர் சேகரிப்பு தகவல் மையம் ஆட்சியர் தொடங்கிவைத்தார்

    Published on : 11th June 2014 04:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மின்னணு தகவல் மையத்தை மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

    மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. திங்கள்கிழமை பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழைநீர் சேமிப்பின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாசகங்கள், அடங்கிய தகவல் பலகையை (எல்சிடி டிவியின் செயல்பாட்டை) மாவட்ட ஆட்சியர் தொடங்கிவைத்தார்.

    மேலும், புதுவாழ்வுத் திட்டத்தின் சார்பில் மகளிóர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணியையும் ஆட்சியர் தொடங்கி வைத்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டறிக்கைகளையும் வழங்கினார்.

    பேரணி பேருந்துநிலையம் மற்றும் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.

    நிகழ்ச்சியில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சடையப்ப விநாயகமூர்த்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முஸ்தபா கமால் பாட்ஷா, மகளிர் திட்ட அலுவலர் சாமுவேல் இன்பதுரை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai