Enable Javscript for better performance
அரியலூரில் 2 குழந்தைகள் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் 2 குழந்தைகள் தொண்டு நிறுவனத்திடம் ஒப்படைப்பு

    By dn  |   Published on : 11th June 2014 04:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூரில் சாலையோரம் கண்டெடுக்கப்பட்டு தொட்டில் குழந்தைகள் திட்டத்தின் கீழ் வளர்க்கப்பட்டு வந்த 2 குழந்தைகள் தொண்டு நிறுவனத்திடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

    அரியலூர் ரயில்வே கேட் அருகே உள்ள பெரிய ஏரிக்கரையில் கடந்த மே 5-ம் தேதி 8 மாத ஆண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது. இதேபோல அரியலூர் பேருந்து நிலைய நுழைவு வாயில் முன்பு மே 19-ம் தேதி பிறந்து 3 நாட்களே ஆன பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது. அரியலூர் அரசு மருத்துவமனையில் தொட்டில் குழந்தைகள் திட்டத்தில் சேர்க்கப்பட்ட இக் குழந்தைகளுக்கு விக்ரம், சொர்ணா என்று மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் பெயர் சூட்டினார்.

    இந்நிலையில், இந்த இரண்டு குழந்தைகளும் திருச்சிராப்பள்ளி சாக்சீடு தொண்டு நிறுவனத்திடம் செவ்வாய்க்கிழமை ஆட்சியர் ஒப்படைத்தார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai