Enable Javscript for better performance
ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற மூதாட்டியிடம் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்ற மூதாட்டியிடம் விசாரணை

    By dn  |   Published on : 11th June 2014 04:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதம் இருக்க  முயன்ற மூதாட்டியை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

    அரியலூர் அருகே உள்ள பெருமாள் சாவடி கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மனைவி பெரியம்மாள் (65). பெரியசாமி இறந்து விட்டார். இந்நிலையில், பெரியம்மாள் நிலம் விற்ற வகையில் தனக்கு கிடைத்த பணம் ரூ. 14 லட்சத்து 48 ஆயிரத்தை தனது மகளான அதே ஊரைச் சேர்ந்த மீனாம்பாளிடம் (48) கொடுத்திருந்தாராம்.

    பணத்தைப் பெற்றுக் கொண்ட மீனாம்பாள் தனது தாயார் பெரியம்மாளை கவனிக்கவில்லையாம். இதுகுறித்து பெரியம்மாள் கேட்டதற்கு, மீனாம்பாள் மற்றும் அவரது கணவர் தங்கமுத்து (55),பேரன்கள் பெரியசாமி (30), பழனிச்சாமி (28) 4 பேரும் சேர்ந்து பெரியம்மாளை தாக்கினராம்.

    இதுகுறித்து பெரியம்மாள் அரியலூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜியாவுல்ஹக்கிடம் புகார் தெரிவித்தார். ஆனால், காவல் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.

    இந்நிலையில், ஆட்சியர் இதில் தலையிட்டு நடவடிக்கை மேற்கொண்டு மகளிடமிருந்து பணத்தை  பெற்றுத் தர வேண்டும் என்றும் கோரி பெரியம்மாள் செவ்வாய்க்கிழமை அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருக்க முயன்றார். தகவலறிந்த அரியலூர் நகர காவல் நிலைய போலீஸார் அனுமதியில்லாமல் உண்ணாவிரதம் இருக்க முயன்றதாகக் கூறி பெரியம்மாளை விசாரணைக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai