Enable Javscript for better performance
டாஸ்மாக் கூடத்தில் தகராறு: 5 பேர் மீது வழக்கு- Dinamani

சுடச்சுட

    

    அரியலூரில் டாஸ்மாக் மதுபானக் கூடத்தில் தகராறில் ஈடுபட்டதாக 5 பேர் மீது போலீஸார் திங்கள்கிழமை இரவு வழக்கு தொடர்ந்தனர்.

    அரியலூர் - செந்துறை சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே மதுக்கூடம் நடத்தி வருபவர் கோவிந்தராஜன். இவரது கடைக்கு திங்கள்கிழமை இரவு அரியலூரைச் சேர்ந்த முத்து, விஜயகுமார், வினோத்குமார், அசோக், ஸ்டாலின்  ஆகியோர் மது அருந்த வந்தனராம்.

    அவர்கள் கோவிந்தராஜனிடம், உணவு வகைகளை வாங்கி சாப்பிட்டுவிட்டு, அதற்குரிய பணத்தை தரவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து கோவிந்தராஜன் கேட்டதற்கு 5 பேரும் சேர்ந்து கோவிந்தராஜனை கட்டையால் தாக்கியுள்ளனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் அரியலூர் போலீஸார் வழக்குப்பதிந்து முத்து, விஜயகுமார் இருவரையும் கைது செய்து,

    மற்ற மூவரையும் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai